சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஒவ்வொரு அமாவாசை தினத்திலும் பக்தர்கள் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி வழிபாடு செய்வது வழக்கமாக ஒன்று.
இந்த நிலையில் இன்று அமாவாசை தினத்தில் பக்தர்கள் வருகை தந்த நிலையில் சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
சதுரகிரி மலைப் பகுதியில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து அதிகமாக இருப்பதாகவும் எனவே சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் வனத்துறை என தெரிவித்தார். இதனால் அமாவாசை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் நுழைவு வாயில் காத்திருக்கின்றனர்.
பக்தர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து வனத்துறை அதிகாரிகள் பரிசீலனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.