மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே.நகரில் வரும் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்று மாலை ஓபிஎஸ் அணியினர் ஜெயலலிதாவின் பிணத்தை சவப்பெட்டியில் வைத்து பிரச்சாரம் செய்தனர்.
முதலில் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆர்.கே.நகர் மக்கள் ஜெயலலிதாவின் பிணம் தோண்டி எடுக்கப்பட்டதாகவே நினைத்தனர். பின்னர்தான் அது பொம்மை ஜெயலலிதா என்றும், நூதனமான பிரச்சாரத்திற்காக ஜெயலலிதா போன்ற பொம்மையை ஏற்பாடு செய்து அதை சவப்பெட்டியில் வைத்துள்ளதும் தெரிய வந்தது.
ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்துவது போல இந்த பிரச்சாரம் இருந்தாலும் பெரும்பாலான மக்கள் இந்த அணுகுமுறையால் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிகிறது. மேலும் ஜெயலலிதா உருவபொம்மை மீது உள்ள தேசியக்கொடியை அகற்ற வேண்டும் என்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஓபிஎஸ்அணியினருக்கு காவல்துறையினர் அறிவுறுத்தியாதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.