உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியை காண தினகரன் காவேரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
வயது முதிர்வு மற்றும் உடல் நிலைக்கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடல் நிலையில் கடந்த சில நாட்களாக நலிவு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக கோபாலபுரம் இல்லத்திலேயே மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.
நேற்று நள்ளிரவு அவரின் உடல்நிலை மோசமானது. எனவே மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவர் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
பல்வேறு கட்சித் தலைவர்கள் காவேரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் உடல் நலம் குறித்து ஸ்டாலினிடம் கேட்டறிந்தனர்.
இந்நிலையில் சற்று நேரத்திற்கு முன்பு காவேரி மருத்துவமனைக்கு வந்த அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் கேட்டறிந்தார். அவருடன் செந்தில்பாலாஜி உள்ளிட்டவர்கள் வந்திருந்தனர்.