தமிழக முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஹ்டுணைமுதல்வரான ஓபிஎஸ் ஆகியோரை அவதூராக பேசியதாக நகைச்சுவை பட்டிமன்ற பேச்சாளரும் திமுக கட்சியைச் சேர்ந்தவருமான திண்டுக்கல் ஐ.லியோனி மீது 4 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் மு. கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த ஜூலை மாதம் தியாகராய நகரிலுள்ள சதாசிவம் சாலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார் லியோனி.
அப்போது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ,துணைமுதலைமச்சர் ஓ.பன்னீர் செல்வம் அமைச்சர்கள் போன்றவர்களை அவதூராக பேசியதாக பாண்டிபஜார் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிமேகலை அளித்த புகாரின் அடிப்படையில் திண்டுக்கல் ஐ. லியோனி மீது மிரட்டுதல்,விளைவித்தல் போன்ற கலவரத்தை தூண்டும் விதத்தில் பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.