Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடிப்படை அறிவு வேணும்.. கூட இருக்கிறவங்களுக்கே ஒன்னும் செய்யல.. விஜயை விமர்சித்த ராஜகுமாரன்

Advertiesment
இயக்குனர் ராஜகுமாரன்

Bala

, செவ்வாய், 2 டிசம்பர் 2025 (13:00 IST)
ஒரு வார்டு மெம்பர் கூட ஆகாத ஒருவர் எப்படி முதல்வராக முடியும் என விஜயை பற்றி கடுமையாக விமர்சித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார் இயக்குனர் ராஜகுமாரன். முதல்வர் ஆகக் கூடாது என்பது என் எண்ணம் இல்லை. ஆனால் எடுத்த உடனேயே முதல்வராகணும்னா எப்படி? அனுபவம் வேண்டாமா என்பதுதான் என்னுடைய  கேள்வி என கூறியுள்ளார் ராஜகுமாரன். மேலும் அவர் கூறியதாவது:
 
ஒரு உதாரணத்திற்கு 10 லட்சம் மதிப்புள்ள ஒரு காரை ஓட்டுவதற்கு பத்து வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் ஆன ஒரு டிரைவரை நாம் தேடுகிறோம். அதைப்போல 10 கோடி மக்கள் இருக்கும் இந்த மாநிலத்திற்கு எவ்வளவு அனுபவம் வாய்ந்த முதல்வர் வேண்டும் என்பதை யோசிக்கணும். ஒரு வார்டு மெம்பராக கூட ஆகாத ஒருவரை எப்படி முதல்வராக பார்க்க முடியும். இதை அவர் எப்படி நினைக்கிறார் என்பதும் தெரியாது. அனுபவம் வேண்டும் சார். சட்டசபைக்குள் எந்த வாசல் வழியாக சென்று எந்த வாசல் வழியாக வரவேண்டும் என்பது பற்றி கூட தெரியணும்.
 
அல்லது எம் ஜி ஆர் மாதிரி செய்திருக்கலாம். கட்சி கூட்டணியை வைத்துக்கொண்டு பத்து, இருபது எம்எல்ஏக்கள் ஜெயித்து இரண்டு மூன்று மந்திரி சீட்டு கூட வாங்கிக்கொண்டு இரண்டு எலக்சனுக்கு அதை அப்ளை செய்து அரசியல் என்றால் என்ன? அங்கு என்னென்ன நடக்கிறது? சட்டதிட்டங்கள் எப்படி இயற்றப்படுகிறது? எப்படி ஒரு சட்டசபைக்குள் நுழைந்து உட்கார்ந்து பேசணும்? இதெல்லாமே இருக்கு. சினிமா மாதிரி நம்ம இதை சினிமா செட் வைத்தா பண்ணிக் கொண்டிருக்கிறோம்? போனதும் உட்கார்ந்து பதவி ஏற்ப விழா செய்து கொண்டதற்கு? இது ஒரு பெரிய ப்ராசஸ்.
 
 இதை மக்களும் புரிந்து கொள்ளனும். உணர்ச்சிகரமான வேகத்திலிருந்து அறிவுப்பூர்வமான சிந்தனைக்கு வாங்க. விஜய் நமக்கு ஒன்னும் எதிரி கிடையாது. என்னுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டவர். இன்னொரு விஷயம் கூட நான் சொல்கிறேன். அனைவருக்கும் வீடு. அனைவருக்கும் பைக். இதை கேட்கும் போது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. 30 வருடமாக நாங்கள் உங்களுக்கு லைட் போட்டு வையர் பிடித்து குடை பிடித்து மேக்கப் போட்டு சோறு போட்டு பாத்திரம் கழுவி உங்களை காருக்குள் உட்கார வைத்து குளுகுளுவென ரூமில் வைத்து 30 வருடமாக எங்கள் பெப்சி தொழிலாளர்கள் என ஒன்றரை லட்சம் பேர் இருக்கிறார்கள்.
 
எலக்சனுக்கு இன்னும் டைம் இருக்கிறது. இந்த ஆறு மாசத்தில் அந்த ஒன்றரை லட்சம் பேருக்கு நீங்க ஃபர்ஸ்ட் வீடு கொடுத்துடுங்க. பைக்கும் கொடுத்துருங்க. அப்புறமா இந்த தேர்தலில் நீங்க வந்து மக்களுக்கு கொடுங்கள். முப்பது வருஷமா உங்களை பெரிய கிரீடத்தில் தூக்கிக்கொண்டு உட்கார வைத்த இந்த தொழிலாளர்களுக்கு வாழ்வு கொடுத்தீங்கன்னா அது எங்களுக்கு மகிழ்ச்சி. எங்கேயோ இருக்கிற விவேக் ஓபராய் ,இங்க வந்து வீடு கட்டி கொடுத்திருக்கிறார். செய்ய முடியும் உங்களால் .ஆனால் அந்த சிந்தனை இல்லை.
 
 உங்களுடைய சிந்தனை எல்லாம் எப்படியாவது முன்னேற வேண்டும் என்பது மட்டும்தான் இருக்கிறது. சூர்யா எவ்வளவோ செய்கிறாரே. எவ்வளவு பேரை படிக்க வைக்கிறார். இதை போய் அவர் எங்கேயாவது சொல்லிக் கொண்டிருக்கிறாரா ? செய்வது என்பது வேறு. பேசுவது சொல்வது என்பது வாக்குறுதி கொடுப்பது என்பது வேறு. வாக்குறுதிகளை தேர்தலில் நாம் எவ்வளவோ சந்திக்கிறோம். அவைகள் எல்லாம் செய்யப்பட்டிருக்கிறதா ?மற்ற மாநிலங்களை விட நம்முடைய மாநிலம் ஏதோ அமைதியாக நன்றாக செயல்படுகிறது என்பது மட்டும்தான் இங்கு இருக்கிறது.
 
ஆக அரசியல் என்பது ஒரு விளையாட்டுதான். நிறைய அனுபவம் மிகுந்த அரசியல் கட்சிகள் இருக்கிறது. அதில் ஏதாவது ஒரு  கட்சியுடன் கூட்டணி வைத்துவிட்டு வாருங்கள். ஏன் முதல்வராகக் கூடாது. ஆகலாமே. ஆனால் மிக அனுபவம் வேண்டும் அவ்வளவுதான் என ராஜகுமாரன் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொடர் முயற்சியில் தவெக... புதுச்சேரியில் விஜயின் ரோட் ஷோ நடக்குமா?....