முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே இரண்டு முறை முதல்வராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். அவர் மறைந்த பின்னரும் ஓபிஎஸ் தான் முதல்வராக இருந்தார். ஆனால் சசிகலா குடும்பத்தினர் ஓபிஎஸ் முதல்வராக இருப்பதை விரும்பாததால் மிரட்டி ராஜினாமா கடிதம் பெற்றதாகவும், அதன் பின்னர் தான் தர்மயுத்தம் செய்ததாகவும் ஓபிஎஸ் ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் தான் முதல்வராக நீடிக்க வேண்டும் என்று சசிகலா குடும்பத்தில் இருந்த திவாகரன் விரும்பியதாகவும், திவாகரன் இல்லாத நேரத்தில் தன்னிடம் ராஜினாமா கடிதத்தை சசிகுமார் குடும்பத்தினர் பெற்றதாகவும் ஓபிஎஸ் தற்போது கூறியுள்ளார்.
மேலும் தான் முதல்வராக இருந்து வர்தா புயலை விரட்டியதாகவும், அதன் பிறகு தமிழகத்திற்கு எந்தப் புயலும் வரத் தயங்குகிறது என்றும் பெருமையுடன் கூறிக்கொண்ட துணை முதல்வர் ஓபிஎஸ், தங்களுக்கு முதுகெலும்பு இல்லை என்று ஸ்டாலின் கூறியதற்கு பதிலடி தரும் வகையில், முதுகெலும்பு இருப்பதால்தான் காவிரி விவகாரத்தில் சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றதாக தெரிவித்தார்.