Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக கூட்டணியில் பாமக, தேமுதிக.. இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை..!

Siva
திங்கள், 26 பிப்ரவரி 2024 (07:43 IST)
தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்பதும் குறிப்பாக திமுக கூட்டணியில் உள்ள ஒரு சில கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்டதாக அதிகாரபூர்வமாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் சேரும் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஆரம்ப கட்டத்தில் அதிமுக கூட்டணியில்தான் தேமுதிக மற்றும் பாஜக இணையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த இரு கட்சிகளும் பாஜக கூட்டணியில் சேர்வதற்கான பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இந்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தேமுதிக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுக்கும் மூன்று மக்களவைத் தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா தொகுதி என பேச்சுவார்த்தை நடத்தியதற்காகவும் விரைவில் இது குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் தமிழ் மாநில காங்கிரஸ் உள்பட ஒரு சில கட்சிகளும் பாஜக கூட்டணியில் இணைய பேச்சு வார்த்தை நடத்தி வருவதால் அடுத்தடுத்த நாட்களில் இது குறித்த உறுதி செய்யப்பட்ட செய்திகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிலம் கையகப்படுத்தும் விவகாரம்: மாவட்ட ஆட்சியரை ஓட ஓட விரட்டிய பொதுமக்கள்..

ஆட்சி மாறினால் கலைஞர் சிலைகள் உடைக்கப்படும்? - சீமான் பேச்சால் சர்ச்சை!

இந்தியாவில் Sony Playstationக்கு அனுமதி இல்லையா? கேம் பிரியர்கள் அதிர்ச்சி! - என்ன காரணம்?

பா.ஜ.க-வுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்..!

வயநாடு இடைத்தேர்தல்.. இன்றுடன் பிரச்சாரம் முடிவு.. ராகுல் - பிரியங்கா தீவிரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments