உடல்நல குறைவு காரணமாக தீவிர அரசியலில் ஈடுப்படாமல் இருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்சும் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளதாக தெரிகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிகிசசைக்காக அமெரிக்கா சென்ற விஜயகாந்த் நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்த இறுதி கட்ட அறிவிப்பை வெளியிட கடந்த பிப்ரவரி மாதம் தமிழகம் வந்தார்.
கூட்டணி அமைந்தது, தொகுதிகள் ஒதுக்கப்பட்டது, அரசியல் பிரச்சாரம் சூடு பிடித்தது. இருப்பினும் விஜயகாந்த் பிரச்சாரத்திற்கு வர வேண்டும் என தொண்டர்கள் காத்திருந்தனர். எனவே தொண்டர்களை மகிழ்விக்கும் வகையில் மூன்று இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பிரச்சார இடங்களில் விஜயகாந்த் பெரிதாக ஏதும் பேசவில்லை, குறைவாகவே பேசினார். ஒரு சில இடங்களில் அவர் பேசியது கூட சரியாக புரியவில்லை. அவருக்கு பேசுவதில் சிறமம் இருப்பதால் அதற்காகவும் தனி சிகிச்சை கொடுக்கப்படுகிறதாம்.
அதோடு, தேர்தல் நாளன்று சென்னையில் சாலிகிராமம் வாக்கு சாவடியில் காலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதாவுடன் வந்து வாக்களித்தார். தேர்தல் முடிந்தது எனவே மீண்டும் சிகிச்சைக்காக அவர் அமெரிக்கா செல்ல உள்ளார் என செய்திகள் வெளியாகி வருகின்றன.
செய்திகள் வெளியானாலும், விஜயகாந்த் தரப்பில் இருந்து இது குறித்த எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.