Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

அதிமுக ஆட்சியா? பாஜக ஆட்சியா? - சட்டசபையில் எதிர்கட்சிகள் அமளி

அதிமுக ஆட்சியா? பாஜக ஆட்சியா? - சட்டசபையில் எதிர்கட்சிகள் அமளி
, செவ்வாய், 20 மார்ச் 2018 (11:33 IST)
தமிழகத்தில் ராம ராஜிய ரத யாத்திரை நடத்த அரசு அனுமதி கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தரப்பில் சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

 
கடந்த சில நாட்களுக்கு முன் உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து கிளம்பிய ராமராஜ்ய ரதம் மகாராஷ்டிரா, கேரள உள்ப்ட ஒருசில மாநிலங்களை கடந்த சற்றுமுன் தமிழகத்தின் எல்லையான நெல்லை மாவட்டத்தில் உள்ள கோட்டை வாசல் பகுதிக்கு வந்துள்ளது.
 
ரதயாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உள்பட பல்வேறு கட்சி தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருவதால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை, 6:00 மணியில் இருந்து, 23ம் தேதி காலை வரை, நெல்லை மாவட்டத்தில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 144 தடையை மீறி போராட்டம் நடந்த சென்ற திருமாவளவன், ஜவாஹிருல்லா, வேல்முருகன், உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சட்டசபையில் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது, நடப்பது அதிமுக ஆட்சியா இல்லை பாஜக ஆட்சியா? அயோத்தி பிரச்சனை நீதிமன்றத்தில் இருக்கும்போது யாத்திரையை தமிழக அரசு எப்படி அனுமதித்தது என்பது உள்ளிட்ட பல கேள்விகளை அவர் எழுப்பினார்.
 
அதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, 5 மாநிலங்களை கடந்து யாத்திரை தமிழிகத்திற்கு வந்துள்ளது. அங்கெல்லாம் எந்த பிரச்சனையும் இல்லை. தமிழகத்தில் ரத யாத்திரைக்கு அரசியல் சாயம் பூசுவது சரியல்ல என விளக்கம் அளித்தார். 
 
ஆனால், அவரின் விளக்கத்தை திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஏற்காமல் சட்டசபையில் அமளியில் ஈடுபட்டனர். எனவே, சபாநாயகரின் உத்தரவுப்படி திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

4 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை; உடற்கல்வி ஆசிரியர் கைது