தமிழகம் முழுவதும் அனுமதியின்றி செயல்பட்டு வரும் குடிநீர் ஆலைகளை மூடிவரும் நிலையில் திமுக பொருளாளர் துரைமுருகனின் ஆலையும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் குடிநீர் ஆலைகளில் பல அரசின் அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சுவதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில் அனுமதி இன்றி செயல்படும் குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்க உத்தரவிடப்பட்டது.
அதன்படி தமிழகம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பல ஆலைகளை அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர். திமுக பொருளாளரான துரைமுருகனுக்கு சொந்தமான அருவி குடிநீர் சுத்திகரிப்பு ஆலை காட்பாடி அருகே உள்ள உள்ளிபுதூரில் செயல்பட்டு வருகிறது. அங்கு சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் அந்த ஆலை முறைப்படி அனுமதி பெறாமல் செயல்படுவதாக சீல் வைத்துள்ளனர்.