Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

ஒரு புயலுக்கே திமுக ஆட்சி ஆடிப் போய்விட்டது - எடப்பாடி பழனிசாமி

edapadi

Sinoj

, செவ்வாய், 26 மார்ச் 2024 (20:05 IST)
வெள்ள காலங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்லாமல் டெல்லியில் கூட்டணி பேசச் சென்றுவிட்டார் என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.
 
18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாகவும் மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்று  தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்   அறிவித்தார்.
 
அதன்படி தேர்தல் விதிகள்  நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது. 
 
தற்போது  நாடு முழுவதும்  பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகள் தீவிர  பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 
 
இந்த நிலையில்,  அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. சமீபத்தில் தொகுதிப் பங்கீடு கையெழுத்தாகி வேட்பாளர் பட்டியல் வெளியானது.
 
இந்த நிலையில், தூத்துக்குடியில் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து,  அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
 
அவர் கூறியதாவது: அதிமுக கூட்டணி பற்றி பத்திரிகை, ஊடகங்களில் விமர்சனம் செய்யப்படுகிறது. 2011 -ல் தேமுதிகவுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றோம். பின்னர் தேமுதிக எதிர்க்கட்சியாக இருந்தது. இன்று இரண்டு கட்சிகளும் மீண்டும் ஒன்றிணைந்துள்ளதால், வெற்றி நிச்சயம். திமுக கூட்டணியில் உள்ளவர்கள் எந்தப் பிரச்சனைகள் குறிதிதும் வாய் திறப்பதில்லை என்று தெரிவித்தார்.
 
மேலும் ஒரு புயல்தான் வந்தது அதற்கே திமுக ஆட்சி ஆடி போய்விட்டது.  ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில்  எத்தனையோ இயற்கைப் பேரிடர்கள் வந்தது. அப்போது நாம் திறமையாக செயல்பட்டோம்.  டிசம்பர் மாதம் சென்னை வானிலை மையம் மழை வரும் என அறிக்கைவிட்டது. திமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை; வெள்ள காலங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்லாமல் டெல்லியில் கூட்டணி பேசச் சென்றுவிட்டார் என்று விமர்சித்தார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவை காப்பாற்ற வேண்டிய தேர்தல் இது- முதல்வர் மு.க.ஸ்டாலின்