Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

திமுக Big Brother Attitude காட்டியதில்லை... நேரு - பாரதி கூட்டுப்பேட்டி!!

திமுக Big Brother Attitude காட்டியதில்லை... நேரு - பாரதி கூட்டுப்பேட்டி!!
, புதன், 3 மார்ச் 2021 (12:31 IST)
திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு மற்றும் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூட்டாக பேட்டி அளித்துள்ளனர்.

அதில், திமுக சார்பில் திருச்சியில் நடைபெற இருந்த மாநில மாநாடு, பொதுக்கூட்டமாக மாற்றப்பட்டு வரும் 7ஆம் தேதி நடைபெறும் என திமுக அறிவித்ததுள்ள நிலையில், மாநாட்டுக்கான ஏற்பாடுகள் குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக முதன்மைச் செயலாளர் கே என் நேரு மற்றும் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி,
 
திருச்சி மாநாட்டில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான திமுகவினர் கலந்துகொள்ள உள்ளனர். இதில் கலந்துகொள்ளும் திமுக தலைவர், தமிழநாட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் எந்தெந்த துறை வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். தொலைநோக்கு திட்டங்கள் குறித்தான அறிவிப்பை வெளியிடுவார்.
 
கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். மார்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியுடன் பேச்சுவார்த்தை சுமூகமாக தான் நடந்தது. அவர்கள் எங்களிடம் அதிருப்தி எதுவும் தெரிவிக்கவில்லை. கூட்டணி கட்சிகள் நிறைய உள்ளன இதனால் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்ய தாமதம் ஏற்படுகிறது. இரண்டு நாட்களில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நிறைவுபெறும். 
 
திமுக என்றும் தோழமை கட்சியிடம் Big Brother attitude காட்டியதில்லை. திமுக தலைவர் ஸ்டாலின் காங்கிரஸ் தலைவர் ராகுலை பிரதமர் ஆக முன்மொழிந்தது போன்று, திமுக தலைவர் ஸ்டாலினை முதலமைச்சராக ராகுல் காந்தி ஏன் முன் மொழியவில்லை என ராகுலிடம் தான் கேட்க வேண்டும்.
 
கூட்டணி கட்சிகளில் சில கட்சிகள் தனிச் சின்னத்தில் போட்டியிடுவதாக விருப்பம் தெரிவிக்கின்றனர். புது சின்னத்தை மக்களிடம் கொண்டு சென்று ஓட்டு வாங்குவது சிரமம், இதனால் உதய சூரியன் சின்னத்திபோட்டியிடுவது தொடர்பானல் போட்டியிட வலியுறுத்துகிறோம். அதற்கு அவர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். விரும்பாத கட்சியினர் தலைவரிடம் பேசுகின்றனர்.
 
திமுக சார்பாக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடவில்லை என ஊடகங்களில் வெளியான தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. அதே வேளையில், அவருக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமா என்பது குறித்து தலைமை தான் முடிவு செய்யும்.
 
மத நல்லிணக்கம் அடிப்படையில் திமுக செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் அயோத்தியில் ராமர் கோவிலுக்கு நிதி உதவி கொடுத்துள்ளார். திமுக சார்பில் கொடுக்க வில்லை. நாங்கள் பாபர் மசூதி இடிப்புக்கு எதிரானவர்கள். ஆனால் ராமருக்கு எதிரானவர்கள் இல்லை. எங்கள் கட்சியின் பலர் பெயர் ராமசாமி குப்புசாமி என உள்ளது. எங்கள் தலைவரே ராமசாமி தான் என தெரிவித்தனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜோசிடர் பேச்சால் மகனை கொன்ற தந்தை! – மு.க.ஸ்டாலின் வேதனை