நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெற்ற நிலையில் கும்பகோணம் மேயர் பதவி காங்கிரஸுக்கு ஒதுக்கப்படலாம் என பேசிக் கொள்ளப்படுகிறது.
தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் திமுக கூட்டணி பல இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் திமுக கூட்டணி கட்சிகளிடையே மாநகராட்சி மேயர் பதவிகள் வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
திருப்பூரில் துணை மேயர் பதவியை கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக ஒதுக்கியுள்ளது. திமுகவுடன் பல காலமாக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவி வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இரண்டு மாநகராட்சிகளில் துணை மேயர் பதவிகள் வழங்கப்படலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது.