Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

10% இட ஒதுக்கீடு விவகாரம்: திமுகவின் திடீர் மெளனம் ஏன்?

Advertiesment
10% இட ஒதுக்கீடு
, ஞாயிறு, 27 ஜனவரி 2019 (17:25 IST)
மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த பொருளாதாரத்தில் ;பின்தங்கிய முற்பட்ட வகுப்பினர்களுக்கான 10% இட ஒதுக்கீடு மசோதாவை அதிமுக மற்றும் திமுக கட்சிகள் பாராளுமன்றத்தில் கடுமையாக எதிர்த்தன. குறிப்பாக அதிமுக எம்பி தம்பிதுரை, திமுக எம்பி கனிமொழி ஆகியோர் இதுகுறித்து ஆவேசமாக பாராளுமன்றத்தில் பேசினர்
 
ஆனால் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் இந்த மசோதாவிற்கு ஆதரவு கொடுத்ததால் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது
 
இந்த நிலையில் 10% இட ஒதுக்கீட்டை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்த போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் ஆகியவற்றையும் நடத்த திமுக திட்டமிட்டிருந்தது
 
10% இட ஒதுக்கீடு
ஆனால் 10% இடஒதுக்கீடு என்பது பிராமணர்களுக்கு மட்டுமின்றி பிள்ளைமார், ரெட்டியார், முதலியார் உள்பட பல சமூகங்களுக்கு பயன்படும். மேலும் நெல்லை, குமரி மாவட்டங்களில் 10% இட ஒதுக்கீட்டிற்கு நன்றி என இந்த சமூகங்களின் சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் 10% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் அது பாராளுமன்ற தேர்தலில் மேற்கண்ட சமூகங்களின் எதிர்ப்பை சந்திக்க வரும் என்று என திமுக நிர்வாகிகள் ஸ்டாலினிடம் கூறியதாகவும், எனவே இப்போதைக்கு இந்த விஷயத்தில் அடக்கி வாசிக்க திமுக தலைமை முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜகவில் இணைந்த விஜய்-விஜயகாந்த் பட நாயகி