Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’’அடிச்சு நொறுக்கிய பார் என்னுடையதல்ல ’’ - பார் நாகராஜ் பகீர்

Advertiesment
Do not
, வியாழன், 14 மார்ச் 2019 (17:44 IST)
சில நாட்களுக்கு முன் பொள்ளாச்சியில் இளம் பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து விடியோ எடுத்து வழக்கில் இதுவரை திருநாவுக்கரசு, சபரிராஜ், வசந்தகுமார் ஆகிய  4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இது பற்றி புகார் அளிக்க பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்க சிபிசிஐடி போலிஸார் தற்போது முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
 
அதில், பாதிக்கப்பட்ட பெண்கள் கோவையில் உள்ள கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு நேரில் வந்து புகார் அளிக்கலாம் என்றும், இதுசம்பந்தமாக தங்களுக்கு தெரிந்த தகவலை தெரிவிக்கலாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Do not
இந்நிலையில் பார் நாகராஜ் அடிதடி வழக்கில் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.இவருக்கு ஜாமீன் தரப்பட்டது. இவரை அதிமுகவிலிருந்து அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று பொள்ளாச்சியில் உள்ள பார் நாகராஜின் கடையை  சிலர் அடித்து நொறுக்கினர். இந்தக் காட்சி அனைத்து சேனல்களிலும் வெளியானது.
Do not
இந்நிலையில் பார் நாகராஜ் நேற்று கோவை ஆட்சியர் ராஜாமணியைச் சந்தித்து மனு அளித்தார்.
 
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது :
Do not
பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட திருநாவுக்கரசு, சதீஷ், ஆகியோர் எனக்கு நட்பாக மட்டுமே தெரியும்.  அதிமுக கட்சியில் நான் உள்ளதால்தான் என்மீது பழி போட்டனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை அடித்ததாக அடிதடி வழக்கு உள்ளது. இதை விசாரித்த மாஜிஸ்திரேட் என்னை ஜாமினில் விடுவித்தார். பாலியல் தொடர்பாக என் போட்டோ உள்ளது மார்பிங் செய்யப்பட்டது. அதுபற்றிய ஆதாரம் என்னிடம் இருக்கிறது. பொள்ளாச்சியில் அடித்து நொறுக்கப்பட்ட பார் என்னுடையது அல்ல. நான் பார் தொழிலை விட்டு 10 மாதங்கள் ஆகிவிட்டன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோடியின் ஆதரவாளர்கள் முட்டாள்கள்! சர்ச்சையில் சிக்கிய குத்து ரம்யா!