தமிழ்நாடு முன்னாள் ஆளுநரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான ரோசய்யா மறைவு குறித்து டாக்டர் சுனில் வருத்தம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முன்னாள் ஆளுநரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான ரோசய்யா காலமானார். ரோசய்யா உடல்நிலை பாதிக்கப்படும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார் . கொனியேட்டி ரோசையா எனும் இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். ஆந்திராவில் 16 முறை வரவுசெலவு திட்டத்தை தாக்கல் செய்து சாதனை படைத்தவர்.
இந்நிலையில் இவரது மறைவு குறித்து டாக்டர் சுனில் கூறியதாவது, முதன் முதலாக "உங்களுக்காக அறக்கட்டளை" ஆரம்பித்து, ஏழை எளியோருக்கு உதவி செய்ய ஊக்கம் கொடுத்ததோடு அறக்கட்டளை தொடக்கவிழாவில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, துவக்கி வைத்து, நல் ஆசி வழங்கி, அறக்கட்டளையின் பல பணிகளுக்கு பலவிதங்களில் பக்கபலமாக இருந்து, என்னை தொடர்ந்து ஆசீர்வதித்து வந்தவர் எனது ஆசான் மேதகு.ரோசையா அவர்கள்.
அவரின் மறைவு என்பது பலருக்கும் இழப்பு என்றாலும் என் மீது தனி பாசம் வைத்து, காட்ஃபாதராக இருந்து என்னை வழி நடத்திய எனக்கு இது ஈடுசெய்யவே முடியாத பேரிழப்பாக வருந்துகிறேன். அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டி, எனது ஆழ்ந்த இரங்கலை வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.