மதுரையில் நேற்று முன் தினம் மாலை முதல் பலத்த காற்று வீசியது. இரவு முதல் மழையும் பெய்யத் தொடங்கியது. பலத்த காற்றுடன் மழைப் பெய்யத் தொடங்கியதால் மதுரையில் மின்வெட்டு ஏற்பட்டது.
மின்வெட்டால் மதுரை ராஜாஜி பொதுமருத்துவமனையும் பாதிக்கப்பட்டது. இதனால் மருத்துவமனை முழுவதும் இருளில் மூழ்கியது. தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் செயற்கை சுவாசம் கொடுக்கப்படுபவர்கள் இதில் அதிகமாகப் பாதிக்கப்பட்டனர். மின்வெட்டுக் காரணமாக உரிய சிகிச்சை அளிக்க முடியாமல் இதுவரை 5 பேர் வரை மருத்துவமணையில் உயிரிழந்துள்ளனர். இதனால் மதுரை மருத்துவமனை சோகத்தில் மூழ்கியுள்ளது.
இந்த உயிரிழப்புகளே அரசே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும் எனவும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளன.
அவர்கள் சார்பில் ‘ உயிரிழப்பிற்கு மின்வெட்டை உடனடியாக சரி செய்யாததும் ஜெனரேட்டர் பழுதடைந்த நிலையில் இருந்ததும் செயறகை சுவாசக் கருவிகள் தரம் குறைவாக இருந்ததுமே காரணம். இதை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்கவேண்டும்’ எனத் தெரிவித்துள்ளனர்.