Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடவுள் நம்பிக்கை இருக்குதா ? இல்லையா ? நடிகர் சிவக்குமார் விளக்கம் ! வைரல் வீடியோ

Webdunia
வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (13:57 IST)
தமிழ் சினிமாவில் மார்கண்டேயன் என்று புகழப்படுபவர் மூத்த நடிகர் சிவக்குமார். இவர், நடிகர்கள் சூர்யா - கார்த்தி ஆகியோரின் அப்பா. அவர் கடந்த 1965 ஆம் ஆண்டு தமிழ்த்திரை உலகில் அறிமுகமாகி பல எண்ணற்ற படங்களில் ஹீரோவாகவும், குணச்சித்திர வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தவர்,  கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான பூவெல்லாம் உன் வாசம் என்ற திரைப்படம்தான் அவர் கடைசியாக நடித்தது.
அதன்பின்னர், இலக்கியத்திலும், சொற்பொழிவாற்றுவதில் என பொதுவாழ்க்கையில் தன்னை இணைத்துக்கொண்டார். நம் நாட்டின் இதிகாசங்களான மகாபாரதம் - இராமயணத்தை தனது பாணியில் ,கல்லூரில் மாணவர்கள் முன் உரையாக நிகழ்த்தியுள்ளார்.
 
இதற்கிடையில், ஒரு நிகழ்ச்சியில் , ஒரு ரசிகர், சிவக்குமாரை நெருங்கி செல்ஃபி எடுக்கும்பொழுது, ஆவேசம் அடைந்த அவர் செல்போனை உடைத்தார். இது போன்று இன்னொரு முறையும் மற்றொருவரின் செல்போனை தட்டிவிட்டார். இது தமிழகம் முழுவதும் பேசும்பொருளானது.
 
இந்நிலையில், சமீபத்தில் சமூக வலைதளங்களில் சிவக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி கடவுள் மதம் தொடர்பாக  ஒரு வீடியோ பரவிவந்தது. அதனால் அவரது பலரும் இது குறித்து கேள்வி எழுப்பியவண்ணம் இருந்தனர்.
 
இந்நிலையில், இன்று சிவக்குமார் தான் பேசிய  ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில், அவர் கூறியுள்ளதாவது :
 
நம் நாட்டில் பல கோடி மக்கள் இருக்கிறார்கள். அவர்களில் இந்துக்கடவுள்களையும் , ஏசுவையும் , அல்லாவையும் கும்படுபவர்களாக உள்ளனர். அந்தக் கடவுக்கு வடிவம் இல்லை. ஆண் பெண் பேதம் கிடையாது. தேசத்தந்தை மகாத்மா காந்தி, கடவுள் என்பதி உணரக்கூடிய விசயம் ; அதைப் பற்றி விவாதிக்ககூடாது என்று கூறினார். ஆனால் அவர் உயிரிழக்கும்போது, ஹேராம் என கூறியதாக வரலாறு கூறுகிறது. காந்தி ராமனை வணங்கியுள்ளார்.  நானும் கடவுள் நம்பிக்கை உள்ளவன்.  எனது அப்பா கடவுள் நம்பிக்கை உடையவர், அதனால் பழனிமலைக்குச் சென்று, அங்கு  அவர் திருப்புகழ் நூலின் பாடல்களை மனப்பாடமாக சொல்லி சாமி கும்பிட்டு வருவார்.
 
எங்கள் வீட்டில் இப்பொழுது பூஜை அறையில் அனைத்து சாமி படங்களும் உள்ளன. உண்மையாக பக்தி என்பது அடுத்தவருக்கு உதவுதல் அவர்களை நேசித்தல், இல்லாதவர்களுக்கு முடியாதவர்களுக்கு உதவும் மனப்பான்மை இவைதான் பக்தி. இதைத்தான் எல்லா மதங்களும் சொல்லுகின்றன ‘’ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
 
நடிகர் இந்த சிவக்குமார் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளதன் மூலம் தான் கடவுள் பக்தி உடையவர் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments