Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கனவில் வந்த மு.க.ஸ்டாலின்..? வடபழனியில் திருஷ்டி கழித்த கூல் சுரேஷ்! - முதல்வருக்காக பாதயாத்திரை செல்ல திட்டம்!

Advertiesment
Cool suresh

Prasanth K

, செவ்வாய், 22 ஜூலை 2025 (14:59 IST)

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் பெற வேண்டி திருவண்ணாமலைக்கு பாதயாத்திரை செல்வதாக நடிகர் கூல் சுரேஷ் அறிவித்துள்ளார்.

 

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் 3 நாட்களுக்கு மருத்துவமனையில் ஓய்வில் இருக்க வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதனால் அவர் க்ரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் ஓய்வில் உள்ளார்.

 

இந்நிலையில் அவர் உடல்நலம் பெற வேண்டி நகைச்சுவை நடிகர் கூல் சுரேஷ், வடபழனி முருகன் கோவிலில் பூஜை செய்து, பூசணிக்காய் மற்றும் தேங்காய் உடைத்து திருஷ்டி கழித்தார். 

 

இதுகுறித்து பேசிய அவர் “நான் தெய்வ நம்பிக்கை உள்ளவன். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திருஷ்டி உள்ளதாக நேற்று எனக்கு கனவு வந்தது. அதனால் அவருக்கு திருஷ்டி கழிப்பதற்காக இதை செய்தேன். வடபழனி முருகன் கோவிலில் அவர் பெயரில் அர்ச்சனை செய்தேன். அவர் இன்னும் 100 ஆண்டுகள் பூரண நலமுடன் வாழ்வார். அவருக்காக வேண்டிக் கொண்டு நாளைக்கு திருவண்ணாமலைக்கு பாதயாத்திரை செல்ல உள்ளேன்” என கூறியுள்ளார்.

 

மேலும் “முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து பலரும் சோசியல் மீடியாக்களில் பலவிதமாக கமெண்ட் போடுகிறார்கள். அவர் என்ன அவருக்கு அவரே ஓட்டு போட்டு முதல்வரானாரா? அல்லது அவர்கள் குடும்பத்தினர் ஓட்டுப் போட்டதால் முதல்வர் ஆனாரா? தமிழக மக்கள் அனைவரும் ஓட்டுப் போட்டாதாலேயே அவர் முதல்வர் ஆனார். ஒரு நிர்வாகம் எனும்போது பல ஏற்ற இறக்கங்கள் இருக்கும் அதை நாம் சமாளித்து செல்ல வேண்டும். அவருக்கு உடல்நலமில்லாத நேரத்தில் அவரை இப்படி பேசக் கூடாது. நான் எந்த விதமான அரசியல் ஆதாயத்திற்காகவும் இதை செய்யவில்லை” என்று கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர் விஜய்.. ஈபிஎஸ் அழைப்பை நிராகரித்த தவெக..!