Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து நோயும் குணமாக பல்லு வெளக்காதீங்க : இப்படியும் ஒரு விளம்பரம்

Webdunia
சனி, 4 ஆகஸ்ட் 2018 (13:26 IST)
பல்லு வெளக்காதீங்க என ஒட்டப்பட்டுள்ள சுவர் விளம்பரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
ஆங்கில மருத்துவமான அலோபதிக்கு எதிராக இயற்கை மருத்துவம் என்கிற கருத்தை தற்போது பலரும் சமூக வலைத்தளங்களில் முன்னிறுத்தி வருகின்றனர். இதைப்பயன்படுத்தி பல போலி மருத்துவர்களும் மக்களிடம் பண மோசடி செய்து வருகின்றனர்.
 
சமீபத்தில் கூட நிஷ்டை மையம் என்கிற நிறுவனத்தை தொடங்கி, வீட்டிலேயே சுகப்பிரசவம் செய்ய இலவச பயிற்சி என அறிவித்த ஹீலர் பாஸ்கர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதேபோல், திருப்பூரில் யூடியூப்பை பார்த்து பிரசவம் செய்த பெண், அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு மரணம் அடைந்தார். 
 
மேலும், தேனியில் தனது மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த கணவன், தொப்புள் கொடியை அறுக்கவே கூடாது என அதிகாரிகளிடம் சண்டையிட்ட சம்பவமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்நிலையில், பல்லு வெளக்காதீங்க என ஒரு  கும்பல் கிளம்பியுள்ளது. இது தொடர்பாக ஒட்டப்பட்ட போஸ்டரில் “ சர்க்கரை முதல் கேன்சர் வரை அனைத்து நோய்களிலிருந்தும் விடுதலை பெற பல்லு வெளக்காதீங்க” என குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான மருத்துவ பயிலரங்கம் ஈரோட்டில் நடை பெறுவதாகவும், அதற்கு ரூ.300  கட்டணமாக வசூலிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இந்த விளம்பர போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments