Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராஜாவை மீண்டும் சேர்த்துக்கொண்ட தீபா - என்னய்யா நடக்குது?

Advertiesment
Driver raja
, வெள்ளி, 2 பிப்ரவரி 2018 (10:01 IST)
ஜெ.வின் அண்ணன் மகள் தீபா பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்ட டிரைவர் ராஜா மீண்டும் அவரின் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

 
எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையின் தலைவர் தீபா தன்னுடைய வீட்டில் சிலர் கல் வீசி தாக்குதல் நடத்தியதாகவும், தீபா பேரவையிலிருந்து நீக்கப்பட்ட ராமச்சந்திரன் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக சில நாட்களுக்கு முன்பு போலீசாரிடம் ஒரு புகார் அளித்தார். ஆனால், போலீசாரின் விசாரணையில் ராமச்சந்திரனை சிக்க வைக்க தீபாவின் கார் ஓட்டுனர் ராஜா அந்த கல்வீச்சு நாடகத்தை அரங்கேற்றியது தெரியவந்தது.  
 
இது தொடர்பான விசாரணையில் தீபா வீட்டின் 3 காவலாளிகளை போலீசார் கைது செய்தனர். எனவே ராஜா தலைமறைவாக இருந்தார். அந்நிலையில், தனது பேரவையின் முக்கிய நிர்வாகியாக இருந்த ராஜாவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தீபா நீக்கினார். அதன்பின், மேற்கு மாம்பலத்தில் ஒரு ஆட்டோ டிரைவருடன் ஏற்பட்ட மோதல் தொடர்பாக எழுந்த புகாரில் ராஜாவை மாம்பலம் போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். 
 
ராஜா கைதான தகவல் அறிந்ததும் தீபா மாம்பலம் காவல்நிலையத்திற்கு சென்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. கட்சியில் இருந்து நீக்கிய ஒருவருக்காக தீபா ஏன் போலீசாருடன் வாக்குவாதம் செய்கிறார் என்பது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் புரியாத புதிராக இருந்தது.
 
அதேபோல், சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜா மீது பலர் தொடர்ந்து புகார்கள் கொடுத்து வந்தனர். ராஜாவால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக தீபாவின் கணவர் மாதவன் ஒரு புகார் அளித்துள்ளார். அதேபோல், பேரவையில் மாவட்ட செயலர் பதவி வாங்கி தருவதாக கூறி பலரிடம் ராஜா கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளதாக ராமச்சந்திரன் புகார் அளித்துள்ளார். 
 
அதனால், ராஜா மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகள் பாயும் எனவும், அடுத்தடுத்த வழக்கில் அவரை போலீசார் கைது செய்வார்கள் எனவும் செய்திகள் வெளியானது. ஆனால், ராஜா சிறையிலிருந்தே வெளியே வந்தார். அவர் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை பாயவில்லை.
 
இந்நிலையில், ராஜாவை மீண்டும் தனது பேரவையில் இணைத்துக்கொள்வதாக தீபா இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தலைமை நிலைய மாநில செயலாளராக ராஜா நியமிக்கப்பட்டுள்ளார் என தீபா குறிப்பிட்டுள்ளார்.
Driver raja

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குடும்பத் தகராறில் மகன், மகளுடன் தற்கொலை செய்து கொண்ட தந்தை