கரூர் அருகே மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியப்போக்கினால் லாலாபேட்டை கரை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், இலாலாபேட்டை பகுதியில் வெள்ள நீர் காவிரி ஆற்றில் அதிகரித்ததையடுத்து கரைகள் அரிப்பெடுத்து மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
இப்பகுதியில் சாக்குமூட்டைகள் உள்ளிட்ட எந்த முன் நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம் எடுக்காமல், அப்படியே, விட்டுவிட்ட நிலையில், வெறும் கண் துடைப்பிற்காகா இலாலாபேட்டை பேருந்து நிலையம் அருகே ஆழமான பகுதி குளிக்க தடை என்று கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் சார்பில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலை நீடித்தால் வெள்ள நீர் அரிப்பு ஏற்பட்டு கரூர் டூ திருச்சி தேசிய நெடுஞ்சாலை வரை வந்து விடும் என்பதோடு, தேசிய சாலைக்கும் ஆபத்து ஏற்படும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கூறி வருகின்றனர்.