சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் கனமழை காரணமாக சென்னையில் உள்ள ஒரு சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
ரங்கராஜபுரம் மற்றும் கணேஷபுரம் ஆகிய இரண்டு சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளதால் அந்த பகுதி வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணி நடைபெற்று வருவதாகவும் சென்னை பெருநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது
எனவே ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை வழியாக செல்லும் வாகனங்கள் உள்ளே அனுமதிக்கப்படாது என்றும் அதற்கு பதிலாக மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
கணேசபுரம் சுரங்கப்பாதை வழியாக உள்ளிருந்து வெளியே செல்லக் கூடிய வாகனங்கள் புளியந்தோப்பு நெடுஞ்சாலை காந்தி நகர் ரவுண்டானா மற்றும் பேசின் பாலம் வழியாக செல்லலாம் என்றும் வெளியிலிருந்து வரக்கூடிய வாகனங்கள் பெரம்பூர் நெடுஞ்சாலை முரசொலி மாறன் பாலம் வழியாக செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் அபிராமபுரம் மூன்றாவது தெரு மற்றும் கீழ்பாக்கம் அரசு பள்ளிகளில் மரங்கள் விழுந்ததால் மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருவதாகவும் எனவே அந்த பகுதியில் வாகனங்கள் செல்வதை தவிர்க்கவும் என்றும் சென்னை பெருநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது