Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஸ்ரேலில் திடீர் போர்.. ஒரு சில மணி நேரத்தில் சென்னையில் உயர்ந்த தங்கம் விலை..!

Webdunia
சனி, 7 அக்டோபர் 2023 (17:26 IST)
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே திடீர் போர் ஏற்பட்டுள்ள நிலையில் போர் குறித்த தகவல் வெளியான ஒருசில மணி நேரத்தில் சென்னையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு ஆகிய இரு தரப்புக்கும் இடையே போர் நடந்து வரும் நிலையில் இதில் பலியானவர்கள் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.

ஹமாஸ் பயங்கரவாதிகள் ராக்கெட் மழை பொழிந்து வரும் நிலையில், மேலும் பல இஸ்ரேலிய நாட்டினர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் காசாவுக்கு அருகில் உள்ள சாலைகளை இஸ்ரேலிய ராணுவம் முடக்கியுள்ளது

காசாவில் இருந்து அவசர அவசரமாக பாலஸ்தீனிய குடும்பங்கள் வீடுகளை காலி செய்து வரும்  நிலையில் இஸ்ரேல் ஹமாஸ் மீது பதில் தாக்குதல் தொடங்கியதால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த தாக்குதலில் ஷார் ஹனேகேவ் பிராந்தியத்தின் மேயர் கொலை செய்யப்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் 35 இஸ்ரேலிய இராணுவ வீரர்களை கைப்பற்றியதாக ஹமாஸ் படை அறிவிப்பு செய்துள்ளது. ஆனால் நாம் போரில் இருக்கிறோம், வெல்லுவோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சமூக வலைதள பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் இஸ்ரேல் போர் எதிரொலியால்  சென்னையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு  ஒரு சவரனுக்கு சில மணி  நேரத்தில் ரூ.520 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.5,370க்கும், சவரனுக்கு ரூ.42,960க்கும் விற்பனையாகி வருகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ் தேசியம் பேசி, விஜய் தனது வாக்கு வங்கியைக் குறிவைப்பதாக நினைக்கிறாரா சீமான்?

தீபாவளிக்கு பின் 3 கொலைகள்.. சிவகங்கை பகுதி மக்கள் அதிர்ச்சி..!

தீர்த்தம் என்று நினைத்து ஏசி தண்ணீரை குடித்த பக்தர்கள்... உபி கோவிலில் பரபரப்பு..!

வாழ்க வசவாளர்கள்.. விஜய்யை மறைமுகமாக விமர்சனம் செய்த முதல்வர் ஸ்டாலின்..!

பிச்சைக்காரரிடம் கடன் வாங்கிய தொழிலதிபர் திவால்..

அடுத்த கட்டுரையில்
Show comments