சட்டப்பேரவையில் இரண்டாவது நாளான நேற்று மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. நேற்று சட்டசபையில் மறைந்த கருணாநிதி பற்றி புகழஞ்சலி தெரிவிக்க, அதனை வழிமொழிந்து பேசினார் துரைமுருகன்.
கருணாநிதி குறித்து பேசிய திமுக பொருளாலர் துரைமுருகன், கருணாநிதிக்கும் அவருக்கும் இருந்த நட்பின் நெருக்கம் மற்றும் தன் உடல்நிலை மீது கருணாநிதிக் கொண்டிருந்த அக்கறைப பற்றி பேசினார். பேசிக்கொண்டிருக்கும் போதே உணர்ச்சிவசப்பட்ட அவர் கண்ணீர் விட்டு அழுதார்.
நேற்று மிகவும் உணர்ச்சிவசப்பட்டதாலோ என்னவோ இன்று காலை அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிகப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார் என செய்திகள் வெளியானதால் திமுக தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால், பயப்படும் அளவிற்கு ஏதுமில்லை வழக்கமான சிகிச்சைகளை முடித்துக்கொண்டு வீட்டிற்கு சென்று ஓய்வெடுக்காமல் நேராக சட்டசபை கிளம்பி வந்துவிட்டார். அதுவும் சரியாக அவை துவங்கும் 10 மணிக்கு ஷார்ப்பாக வந்துவிட்டார்.
இதனால் சட்டசபையில் இருந்த பலர் வியந்துபோயினர். பின்னர், அவரது உடல்நலம் குறித்து கட்சி பேதமின்றி அனைவரும் நலம் விசாரித்தனர்.