தமிழக சட்டசபை கூட்டம் மூன்று நாட்கள் நடை மட்டும் நடைபெறும் என்று சபாநாயகர் தனபால் அவர்கள் அதிகாரபூர்வமாக அறிவிப்பு செய்துள்ளார். சட்டமன்ற கூட்டத்தொடருக்கு முன்னரே சட்டமன்ற உறுப்பினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
செப்டம்பர் 14ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை சட்டசபை கூட்டம் நடைபெறும் என்றும் செப்டம்பர் 14ஆம் தேதி கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளார் இதனை அடுத்து பேரவை காலை 10 மணிக்கு கூடும் என்றும் அதில் கேள்வி நேரம் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 15-ஆம் தேதி மானிய கோரிக்கை மீது விவாதங்கள் நடக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்
இந்த நிலையில் மூன்று நாட்கள் மட்டுமே சட்டமன்ற கூட்டத்தொடர் நடத்துவது தேவையில்லாத ஒன்று என்றும் சட்டமன்ற கூட்டத்தொடரை குறைந்தது 5 நாட்களாவது நடக்க வேண்டும் என்றும் திமுக பொதுச்செயலாளராக பதவி ஏற்க இருக்கும் துரைமுருகன் அவர்கள் தெரிவித்துள்ளார்
மூன்று நாட்கள் மட்டுமே கூட்டத்தொடரை நடத்த வேண்டும என்பதில் சபாநாயகர் உறுதியாக இருப்பது ஏன் என்று தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் மூன்று நாட்கள் மட்டுமே சட்டசபையை நடத்துவதும் ஒன்றுதான் நடத்தாமல் இருப்பதும் ஒன்றுதான் என அவர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது