Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

துரைமுருகன் வீட்டில் ரூ. 10 லட்சம் பறிமுதல் : திமுகவினர் அதிர்ச்சி

Advertiesment
Duramurugan
, சனி, 30 மார்ச் 2019 (12:21 IST)
தேர்தல் நெருங்கும் வேளையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு, வருமான வரித்துறை அதிகாரிகளின் உதவியுடன் எதிர்க்கட்சி தலைவர்களின் வீடுகளில் ரெய்டு நடத்தி பழிவாங்கும் போக்கில் நடந்து வருவதாக அரசியல் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.  தற்போது துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த்துக்கு சொந்தமான பள்ளி, கல்லூரியில்  சோதனை நடந்து வருவதாகத் தகவல் வெளியானது. தற்போது திமுக திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் ரூ. 10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
இந்நிலையில் இன்று காலை 8:03 தேர்தல் பறக்கும் படை மற்றும் வருமான வரித்துறையின் சோதனை முடிவடைந்ததை அடுத்து துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். 
 
முன்னதாக, துரைமுருகன் வீட்டிலும், அவரது கார் உள்ளிட்ட வாகனங்களில் சோதனை நடைபெற்றது .இந்நிலையில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்குச் சொந்தமான வீடு,  சிபிஎஸ்இ பள்ளி,கல்லூரியில் வருமான வரித்துறையினர்  சோதனை நடத்தினர்.
 
இன்று காலை, காட்பாடி கிருஸ்தியான் பேட்டையில் உள்ள துரைமுருகன் கல்லூரி, பள்ளியில் தேர்தல் பறக்கும் படையும் சோதனை நடைபெற்றது. மேலும் வாணியம்பாடியில் திமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் தேவராஜ் வீட்டிலும், சோதனை நடைபெற்றது.
Duramurugan
தற்போது கூடுதலாக மேலும் 3 அதிகாரிகள் துரைமுருகன் வீட்டிற்குள் சென்றுள்ளனர். இரவில் இருந்து நீடிக்கும் சோதனையால் திமுகவினர் கலக்கம் அடைந்தனர்.
 
இந்நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள துரைமுருகன் வீட்டில் அதிகாலை 3 மணி முதல்  நடைபெற்ற வருமான வரித்துறையினரின் சோதனை தற்போது 8:30 மணிக்கு நிறைவடைந்தது.
Duramurugan
வருமான வரித்துறையினரும், தேர்தல் பறக்கும் படையினரும் நடத்திய அதிரடி சோதனை நிறைவடைந்துள்ளது. திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அடுத்த பதவி வகிக்கும் அக்கட்சியின்பொருளாளரான துரைமுருகன் வீட்டில் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையால் அக்கட்சியினர் அதிருப்தி அடைந்தனர்.
Duramurugan
இந்நிலையில் இன்று காலை 8:03 தேர்தல் பறக்கும் படை மற்றும் வருமான வரித்துறையின் சோதனை முடிவடைந்ததை அடுத்து துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து நீண்ட விளக்கம் கொடுத்தார். அதில் என் மகன் கதிர் ஆனந்தின் தேர்தல் வெற்றியை திசை திருப்பவே இந்த ஐடி சோதனை என்றார்.
 
இந்நிலையில் தற்பொழுது துரைமுருகன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் இரண்டு பைகளில் ஆவணங்களுடன் , ரூ.10 லட்சம் பணத்தையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
Duramurugan
இது திமுகவினர் தற்போது அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தவழ்ந்து தவழ்ந்து ஆட்சியை பிடித்தவர் எடப்பாடியார்... பிரபல நடிகர் விளாசல்!!!