Publish Date: Thu, 19 Jan 2023 (18:20 IST)
Updated Date: Thu, 19 Jan 2023 (18:22 IST)
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக அனைத்து மக்களும் மின் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைத்து வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் இதற்காக மின்சார அலுவலகங்களில் 2816 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பை இணைக்க வரும் 31 தேதி வரை அவகாசம் இருக்கும் நிலையில் இதுவரை 2 கோடி பேர் இணைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
சுமார் 75% மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைத்து விட்டதாகவும் மீதமுள்ளவர்கள் வரும் 31ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.