உள்நோக்கத்துடன் வழக்கு பதிவு செய்துள்ளது அமலாக்கப் பிரிவு என செந்தில்பாலாஜி மனைவி தரப்பு ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில் வாதாடிய நிலையில் அமலாக்கப்பிரிவு தரப்பு அதிரடி வாதம் செய்து வருகிறது.
வழக்கை ரத்து செய்யக் கோரும் மனு மீது வேண்டுமானால் இக்காரணத்தை குறிப்பிடலாம் என்றும், ஆட்கொணர்வு மனுவில் இந்த வாதத்தை எழுப்ப முடியாது என அமலாக்கப்பிரிவு தரப்பு வாதம் செய்துள்ளது.
மேலும் விசாரணைக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்பது சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்குக்கு பொருந்தாது என அமலாக்கப்பிரிவு வாதம் செய்தது.
இந்த நிலையில் இருதரப்பு வாதம் இன்னும் சில நிமிடங்களில் முடிந்த பின்னர் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.