Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

தமிழ்நாடு மாநிலமா? மாவட்டமா? பாவம் அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு - (வீடியோ)

தமிழ்நாடு மாநிலமா? மாவட்டமா? பாவம் அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு - (வீடியோ)
, வியாழன், 5 ஜூலை 2018 (10:31 IST)
போராட்டங்கள் அதிகம் நடைபெற்ற ஒரே மாவட்டம் தமிழகம்தான் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசிய விவகாரம் கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.

 
மேடையில் பேசும்போது அரசியல்வாதிகள் உளறிக்கொட்டுவது தொடர்கதையாகி வருகிறது. இதில், எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, செந்தில் பாலாஜி, திண்டுக்கல் சீனிவாசன் என பலரும் அடக்கம்.
 
குறிப்பாக கம்ப ராமாயணத்தை எழுதியது சேக்கிழார் என முதல்வர் ஒரு மேடையில் பேசியது இப்போது வரைக்கும் சமூக வலைத்தளங்களில் கிண்டலடிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், சுந்திரதினம் டிசம்பர் 15 என ஸ்டாலின் பேசியதும் வைரலானது.
 
இந்நிலையில், சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி “இந்தியாவிலேயே அதிக போராட்டம் நடைபெறும் மாவட்டம் தமிழ்நாடுதான்” எனப்பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
 
தமிழ்நாடு ஒரு மாநிலம் என்பது கூட தெரியாமல் மாவட்டம் என ஒரு முதல்வர் பேசலாமா? என பலரும் இதை கிண்டலடித்து வருகின்றனர்.

 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தீபாவளி பண்டிகை ; ரயில் முன்பதிவு ஓவர் : பயணிகள் அதிர்ச்சி