தமிழக முதலமைச்சர் பழனிசாமி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து இன்று ஆய்வு நடத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று முதல்வர் பழனிசாமி தலைமியில் நடந்த கூட்டத்தில் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்களும், மாவட்ட அளவிலான அதிகாரிகள் என அத்தனை பேரும் கலந்துகொண்டனர்.
தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் நெடுஞ்சாலை பணிகள் எந்த அளவில் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றும், எத்தனை பணிகள் நிலுவையில் உள்ளது என்பது குறித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மேலும் அவர் சட்டசபையில் நெடுஞ்சாலைத் துறை மானியக் கோரிக்கை வர உள்ளதால், அது தொடர்பாக பல்வேறு விளக்கங்களையும் கேட்டறிந்தார்.
முதல்வர் பழனிசாமி, நிலுவையில் உள்ள சாலைப்பணிகளை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கையை விரைவில் எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.