புயல், சுனாமி வந்தாலும் மு.க.ஸ்டாலின் குறை சொல்லிக்கொண்டே தான் இருப்பார் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, ஊரடங்கால் தமிழகத்தில் காய்கறிகள் விலை உயர்ந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் கூறுவது தவறு. ஏழை, எளிய மக்கள் வாங்கும் அளவுக்கு காய்கறிகளின் விலையை அரசு கட்டுப்படுத்தியுள்ளது என தெரிவித்தார்.
அதோடு, திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலினையும் விமர்சித்தார். முதல்வர் கூறியதாவது, கொரோனாவை தடுப்பதில் அரசு சிறப்பாக செயல்படுவது எதிர்க்கட்சிகளுக்கு பிடிக்கவில்லை. மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு தேவையானவற்றை பெற திமுக எம்.பி-க்கள் என்ன செய்துவிட்டார்கள்?
புயல், சுனாமி வந்தாலும் மு.க.ஸ்டாலின் குறை சொல்லிக்கொண்டே தான் இருப்பார். திமுக ஒரு குறை கூறும் கட்சி என பேசினார்.