தமிழக அரசின் 2022-23 ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பட்ஜெட் ஏமாற்றம் தருவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் 2022-23ம் ஆண்டிற்கான ஆண்டு பட்ஜெட் இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராகன் பட்ஜெட் உரையை வாசித்தார்.
கல்வி, விவசாயம், சுகாதாரம், மருத்துவம் என பல துறைகளுக்கும் நிதி ஒதுக்கியும், பல புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியும் பட்ஜெட் உரை இருந்தது. சுமார் ஒரு மணி நேரம் 50 நிமிடங்களுக்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை வாசித்து முடித்தார்.
இந்நிலையில் தமிழக அரசின் ஆண்டு பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளதாகவும், ஆக்கப்பூர்வமான வகையில் நிதி ஒதுக்கீடு, பட்ஜெட் திட்டமிடல் இல்லை என்றும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அதிருப்தி தெரிவித்துள்ளார்.