Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

பெரும பேசுறனா? ஆமா பேசுவேன்... எடப்பாடியார் ஆன் ஃபயர்!

பெரும பேசுறனா? ஆமா பேசுவேன்... எடப்பாடியார் ஆன் ஃபயர்!
, வியாழன், 19 நவம்பர் 2020 (14:42 IST)
கோவையில் விமான நிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியின் போது ஆவேசம். 
 
கோவையில் விமான நிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியின் போது நீட்டில் 10% வாங்குவதற்கு பதிலாக 7.5% வாங்கிவொட்டு பெருமை பேசாதீர்கள் என்ற நிருபரின் கேள்விக்கு முதல்வர் ஆவேசம் அடைந்தார். அவரது முழு பேட்டி பின்வருமாறு....
 
நீட் தேர்வில் இருந்து யாருக்கும் விலக்கு கொடுக்கப்பட வில்லை நீட் தேர்வு கூடாது என்பதுதான் அதிமுக நிலைப்பாடு. நீட் தேர்வினால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதால் 7.5 சதவீத உள்இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. இன்று 313 பேர் இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்திருக்கின்றனர்.
 
தமிழகத்தில் 841251 பேர் 12 ம் வகுப்பு எழுதிய மாணவர்களில் 41 சதவீதம் பேர் ,344485 மாணவர்கள் அரசு பள்ளி மாணவர்கள். 41 சதவீதம் படிக்கும் மாணவர்களில் 6 பேருக்கு மட்டுமே இடம் கிடைத்தது. நான் கிராமத்தில் படித்து வந்தவன் என்பதால், அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என அறிந்து உள் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது.
 
புதிய கல்வி கொள்கை குறித்து குழு அமைக்கப்பட்டுள்ளது. குழு அறிக்கையை பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும். இன்று மருத்து படிப்பில் சேர்ந்த மாணவர்கள் உடனடியாக நாளையே சேரவேண்டும்  என்று சொல்லி இருப்பது குறித்து விசாரித்து சொல்கின்றேன். 
 
இந்தியாவிலேயே நீட்டை  எதிர்த்து போராடும் ஒரே மாநிலம் தமிழகம். நீட்டை  கொண்டு வந்தது காங்கிரஸ் ஆட்சியில். திமுக அப்போது அங்கம் வகித்தது. அதை யாரும் கேட்காமல் நீட்டு, நீட்டு, நீட்டுன்று கேட்குறீங்க... 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுத்துள்ளதற்கு  பெருமை பேசுகின்றீர்கள். 
 
ஆனால் மத்திய அரசின் மருத்துவ கல்லூரிகளில் நீட் தேர்வு இல்லையே என்ற கேள்விக்கு முதல்வர் ஆவேசம். 7.5 சதவீதம் என்னவென்று தெரியுமா? தேவையில்லாமல்  பேசாதீர்கள்? பெருமை பேசாதீர்கள் என்ற நிருபரின் கேள்விக்கு முதல்வர் ஆவேசம். 
 
7.5 சதவீதம் அளிக்கப்பட்டது உண்மையில் பெருமை கொள்கின்றேன். நான் கிராமத்தில்  இருந்து வந்தவன். என்ன கேள்வி கேட்குறீங்க கேள்வி என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆவேசத்தோடு பேசுவதை நிறுத்திவிட்டு சென்றுவிட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆந்திரா ஸ்டைல் பெசரட் தோசை செய்ய !!