கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, தினகரன் ஆதரவை விலக்கிக்கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு கொடுத்துள்ளதன் பின்னணி என்னவென தெரியவந்துள்ளது.
விருத்தாச்சலம் எம்.எல்.ஏ கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு மற்றும் அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி ஆகியோர் அதிமுக எம்எல்ஏக்கள் ஆக இருந்து வந்த நிலையில் மூவரும் தினகரனுக்கு ஆதரவளித்து வந்தனர்.
மூவரும் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் கலைச்செல்வன், ரத்தினசபாபதி ஆகிய இரண்டு எம்.எல்.ஏக்கள் அதிமுகவுக்கு ஆதரவு அளித்த நிலையில் தற்போது எம்.எல்.ஏ பிரபுவும் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
எம்.எல்.ஏ பிரபுவின் ஆதரவுக்கு பின்னர் உள்ள காரணம் தற்போது வெளியாகியுள்ளது. ஆம், எம்.எல்.ஏ பிரபு சி.வி.சண்முகத்துடன் டெண்டர் உள்ளிட்ட விவகாரங்களில் ஏற்பட்ட பிரச்சனையால்தான் கட்சி மாறினார். அப்படி இருக்க மீண்டும் அவர் அதிமுகவில் வந்ததற்கு எடப்பாடி பழனிச்சாமியின் வாக்குறுதிதான் காரணமாம்.
அதாவது, தற்போது கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. விரைவில் கள்ளக்குறிச்சிக்கு புதிய ஆட்சியர் நியமிக்கப்பட்டு தனி மாவட்டமாக செயல்பட தொடங்கும். எனவே கவலையை விட்டு வழக்கம் போல் கட்சிப் பணியை கவனியுங்கள் என தெரிவித்துள்ளாராம்.