Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேட்டியை மடித்து கட்டி, வயக்காட்டில் இறங்கிய எடப்பாடியார்!

Webdunia
சனி, 7 மார்ச் 2020 (14:55 IST)
காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டமன்ற கூட்டத்தில் காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக அரசின் இந்த அறிவிப்பை டெல்டா விவசாயிகள் மற்றும் மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

தமிழக சட்டசபையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல தீர்மானத்தை நிறைவேற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திருவாரூரில் விவசாயிகள் இன்று பாராட்டு விழா நடத்தினர். அதில் கலந்து கொள்ள வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிறகு விழாவில் கலந்து கொண்ட முதல்வர் விவசாயிகளுக்காக அதிமுக அரசு செய்துள்ள திட்டங்கள் குறித்து பேசினார்.

பிறகு சித்தமல்லி வழியாக சென்று கொண்டிருந்த முதல்வர் அங்கு காரை நிறுத்தி விவசாய பணிகளில் ஈடுப்பட்டிருந்த விவசாயிகளுடன், வெறும் காலில் வயலுக்குள் இறங்கி நாற்றுகளை நட்டார். பிறகு அவர்களோடு பேசியவர் தனது விவசாய அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண் நீதிபதியை காதலிப்பதாக டார்ச்சர்.. வழக்கறிஞர் மீது அதிரடி நடவடிக்கை..!

அக்டோபர் மாதம் ‘இந்துக்களின் பாரம்பரிய மாதம்’: ஆஸ்திரேலியா அறிவிப்பு

பெண்கள் சத்தமாக குரான் ஓதக்கூடாது: தாலிபான்கள் புதிய நிபந்தனை..!

ஆந்திர கடலோர பகுதியில் வளிமண்டல சுழற்சி: சென்னையில் கனமழை தொடரும்..!

விஜய் எழுப்பிய பாசிசம், பாயாசம் கேள்வி சரியானதே: ஜெயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments