Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடி பழனிசாமி வாக்குகளை இழக்கப் போகிறார்- ராம சீனிவாசன்

Sinoj
சனி, 27 ஜனவரி 2024 (20:02 IST)
எடப்பாடி பழனிசாமி வாக்குகளை இழக்கப் போகிறார் என்று பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் எச்சரித்துள்ளார்.

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக நாடு முழுவதும் உள்ள தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகள் தயாராகி வருகின்றன.

இந்த நிலையில், தமிழகத்தில் அதிமுக கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சமீபத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பாஜகவுடனா கூட்டணி முறிந்ததாக அறிவித்த நிலையில், அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டது குறித்து பாஜக மீது விமர்சனம் கூறியிருந்தார்.

இதனால், முறிந்த கூட்டணி இனிமேல் மீண்டும் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. ஆனால், அரசியலில்  நிரந்த நண்பனும் இல்லை  நிரந்த எதிரியுமில்லை என்பதற்கேற்க அதிமுக தலைவர்களுடன் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளது என்ற தகவல் வெளியாகிறாது.

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி வாக்குகளை இழக்கப் போகிறார் என்று பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் எச்சரித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

பாஜகவுடன் கூட்டணிக்கு வராவிடில் வரும் காலங்களில் அரசியல் ரீதியாக அதிமுகவினர் வருந்துவார்கள். பாஜகவை சாதாரணமாக கருதுகிறார்கள், ஆனால், அப்படியில்லை என்பதை தெரிந்துகொள்வார்கள்.  ‘2019, 2021 ஆம் ஆண்டில் பாஜகவுடன் கூட்டணி வைத்த அதிமுக, இப்போது பசுத்தோல் போர்த்திய புலிபோல்  இருந்தால் அதை நம்ப மக்கள் முட்டாள்கள் இல்லை. எடப்பாடி பழனிசாமி தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும், 13சதவீதம் இஸ்லாமிய வாக்குகளில் 1 சதவீதம் வாக்குகளை பெறுவதே கடினம்’ என்று தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 12 முதல் கனமழை சூடு பிடிக்கும்.. சென்னை மக்கள் ஜாக்கிரதை: தமிழ்நாடு வெதர்மேன்..!

நீட் பயிற்சி மாணவியை 6 மாதமாக பூட்டி வைத்து பாலியல் வன்கொடுமை..2 ஆசிரியர்கள் கைது!

இன்று வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி! 7 நாட்களுக்கு கனமழை..!

தவெக கொடிகள், துண்டுகள்.. திருப்பூரில் குவியும் ஆர்டர்கள்..!

அமெரிக்க தேர்தலில் வெற்றி எதிரொலி: தெலுங்கு டிரம்ப் கோவிலில் சிறப்பு வழிபாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments