சசிகலாவை மறைமுகமாக சீண்டிய எடப்பாடி பழனிச்சாமி: நாங்கள் கொல்லைப்புறமாக வந்தவர்கள் இல்லை!
சசிகலாவை மறைமுகமாக சீண்டிய எடப்பாடி பழனிச்சாமி: நாங்கள் கொல்லைப்புறமாக வந்தவர்கள் இல்லை!
அதிமுகவில் சசிகலா, தினகரன் குடும்பத்துக்கு எதிராக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரடியாக செயல்பட ஆரம்பித்துள்ளார். தினகரனை 420 எனவும் நேரடியாக கூறினார். இதனால் இரு அணியினருக்கும் இடையே வார்த்தை போர் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை ஒவ்வொரு மாவட்டத்திலும் விமரிசையாக அதிமுகவின் ஒவ்வொரு அணியும் கொண்டாடி வருகிறது. கடலூரில் மஞ்சக்குப்பம் மைதானத்தில் தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடந்தது.
இதில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாங்கள் தொடந்து பிரதமரை சந்திப்பது மீனவர்களின் விடுதலைக்காகத்தான் என்றார். மேலும் நாங்கள் கொல்லைப்புறமாக வந்தவர்கள் இல்லை. கீழ் மட்ட பொறுப்புகளில் இருந்து உழைத்து வந்தவர்கள். இந்த இயக்கத்தையும் ஆட்சியையும் யாராலும் அசைக்கவும், ஆட்டவும் முடியாது என பேசினார்.
நாங்கள் கொலைப்புறமாக வந்தவர்கள் இல்லை என எடப்பாடி பழனிச்சாமி கூறுவது சசிகலா குடும்பத்தினர் ஆட்சியையும் கட்சியையும் கைப்பற்ற முயல்வதை தான் குறிப்பிடுகிறார் என அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஓபிஎஸ் கட்சி பணிகள் ஆற்றி ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்று தான் இந்த இடத்துக்கு வந்துள்ளார். ஓபிஎஸ் அணி இணைய வேண்டும் என விருப்பப்படும் எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ் அணியை பற்றி கொல்லைப்புறமாக வந்தவர்கள் இல்லை என கூற வாய்ப்பில்லை.
மாறாக தினகரன் அணிதான் தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சிக்கு சவாலாக இருப்பது. அவர்கள் தான் ஜெயலலிதாவால் நீக்கப்பட்டு தற்போது கட்சியின் சட்ட விதிகளை பின்பற்றாமல் சர்ச்சைக்குறிய வகையில் அதிமுகவில் பதவியை பெற்று அதிமுகவை தங்கள் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சிக்கிறார்கள் எனவே எடப்பாடி பழனிச்சாமி அந்த குடும்பத்தை தான் கொலைப்புறமாக வந்தவர்கள் என மறைமுகமாக கூறுகிறார் என அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.