Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

சத்குருவின் நதிகளுக்கான பேரணி

சத்குருவின் நதிகளுக்கான பேரணி
, புதன், 16 ஆகஸ்ட் 2017 (19:55 IST)
ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தேசிய அளவில் அழிந்துக்கொண்டிருக்கும் நதிகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.


 

 
இந்தியவில் உள்ள நதிகள் புத்துயிர் பெறவே இந்த நதிகளுக்கான பேரணி நடத்த உள்ளதாக ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார். இந்த நதிகளுக்கான பேரணி குறித்து அவர் கூறியதாவது:-
 
இது போராட்டம் அல்ல; இது அழிந்துக்கொண்டிருக்கும் நதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேரணி. தண்ணீரை பயன்படுத்தும் அனைவரும் கட்டாயம் நதிகளுக்கான பேரணியில் கலந்துக்கொள்ள வேண்டும். வற்றாத ஆறுகள் எல்லாம் தற்போது பருவகால ஆறுகளாக மாறிவிட்டன. இதற்கு ஒரே தலைமுறை காலம்தான் ஆகியுள்ளது.
 
நிறைய ஆறுகள் மறைந்துவிட்டது. இப்போதே நாம் விழித்துக்கொள்ளவில்லை என்றால் அடுத்த பதினைந்து வருடத்தில் பயன்படுத்தக்கூடிய நீரின் அளவில் 50% குறைவு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த தேசிய அளவிலான பேரணி ஈஷா அறக்கட்டளை தொண்டர்கள் மற்றும் கிராம பஞ்சாயத்தை சேர்ந்த இளைஞர்களால் வழிநடத்தப்படும் என்றார்.

webdunia

 

 
இந்த பேரணி செப்டம்பர் மாதம் 3ஆம் தேதி கோயம்புத்தூரில் தொடங்கி அதற்கு அடுத்த மாதம் அக்டோபர் 2ஆம் தேதி டெல்லியில் முடிவடைகிறது. இந்த பேரணியை சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த பேரணிக்கு திரைப்பட நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஏராளமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
 
இந்த பேரணியில் கலந்துக்கொள்ள கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்தால் போதும் (Toll Free Number - 8000980009)

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரிய வகை வெள்ளை மான் (Moose): வைரலாகும் புகைப்படம்!!