Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினகரனை காத்திருக்க வைத்து திட்டமிட்டு தாமதமாக வந்த எடப்பாடி பழனிச்சாமி!

தினகரனை காத்திருக்க வைத்து திட்டமிட்டு தாமதமாக வந்த எடப்பாடி பழனிச்சாமி!

Webdunia
வெள்ளி, 30 ஜூன் 2017 (11:14 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கும் இடையே மறைமுக பணிப்போர் நிலவி வருவது அரசியல் வட்டாரத்தில் அனைவரும் அறிந்ததே.


 
 
இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்காத, பேசாத நிலைதான் நீடித்துவந்தது. இந்நிலையில் இதற்கான முயற்சியாக முன்னாள் அமைச்சரும், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியுமான தளவாய் சுந்தரத்தின் மகளின் திருமண நிச்சயதார்த்த விழா அமைந்தது. ஆனால் இந்த முயற்சி கைகொடுக்கவில்லை.
 
தளவாய் சுந்தரத்தின் மகள் டாக்டர் பூர்ணிமாவின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி சென்னை வேளச்சேரியில் உள்ல நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழக அமைச்சர்கள், முதலமைச்சர், அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட பலரையும் அழைத்திருந்தார் தளவாய் சுந்தரம்.
 
தினகரனுக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே நிலவி வரும் பனிப்போரை இந்த சந்திப்பின் மூலம் முடிவுக்கு கொண்டு வரலாம், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என தளவாய் சுந்தரம் திட்டமிட்டிருந்தார். ஆனால் இந்த விழாவில் தினகரன், அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட பல அமைச்சர்கள் கலந்துகொண்டனர், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரவில்லை.
 
முதல்வர் வருவார் என இரவு 8.30 மணி வரை தினகரன் காத்திருந்தார். ஆனால் அதே நேரம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசரின் மகள் நிச்சயதார்த்த விழாவுக்கு தினகரன் செல்ல இருந்ததால் அவர் கிளம்பி சென்றுவிட்டார்.
 
தினகரன் கிளம்பி சென்ற பின்னரே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தளவாய் சுந்தரத்தின் மகள் நிச்சயதார்த்த விழாவுக்கு வருகை புரிந்தார். தினகரனை சந்திக்க கூடாது என திட்டமிட்டே அவர் கிளம்பி சென்று விட்டார் என்ற தகவல் கிடைத்த பின்னரே திட்டமிட்டு எடப்பாடி பழனிச்சாமி தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி குறித்து விமர்சனம் செய்வதா? ஆதவ் அர்ஜுனாவுக்கு ஆ ராசா கண்டனம்..!

இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதல்.. லெபனானில் பெண்கள் உள்பட 492 உயிரிழப்பு..

யுகேஜி படிக்கும் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை.. என்கவுண்டரில் சுட்டுக் கொன்ற போலீஸ்..!

சென்னையில் நள்ளிரவில் கொட்டி தீர்த்த மழை: அதிகபட்சமாக மழைப் பதிவு எங்கே?

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தம்! பள்ளிக்கல்வித்துறை..!

அடுத்த கட்டுரையில்