Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்வி விருது விழா: மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் பரிசாக வழங்கிய விஜய்!

Webdunia
சனி, 17 ஜூன் 2023 (12:32 IST)
நடிகர் விஜய் நடிப்பை இதோடு நிறுத்திவிட்டு விரவாயில் எம்ஜிஆர் ஸ்டைலில் அரசியலில் இறங்கவுள்ளார். அதற்கான முதல் அடித்தளமாக இன்று 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் சிறந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவை நடத்தினார். 
 
இதற்காக தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் இருந்து முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகள் சுமார் 1500 பேர் மற்றும் அவர்களுடன் பெற்றோர்கள் என மொத்தம் 6000 பேருக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  
 
இந்த விழாவில் பேசிய விஜய்,  'உன்கிட்ட காடு இருந்தா எடுத்துக்குவாங்க, பணம் இருந்தா பறிச்சிறுவாங்க, ஆனா படிப்பு மட்டும் தான் நிரந்தரம்' என்ற வசனத்தையும் பேசினார். கல்விக்காக என்னுடைய பக்கத்தில் இருந்து எதாவது செய்ய வேண்டும் என நினைத்து கொண்டிருந்தேன், அது தான் தற்போது நடைபெற்றுள்ளது.
 
wealth is lost nothing is lost, when health is lost somthing is lost, when character is lost everthing is lost. நீங்க பணத்தை இழந்துடீங்கன்னா எதையுமே இழக்கல, ஆரோகியதை இளந்தீங்கனா எதையோ ஒன்றை இலக்குறீங்க, நல்ல குணத்தை இளந்தீங்கனா நீங்க எல்லாத்தையுமே இளந்துடுவீங்க.இனி நீங்கள் வேறு வேறு ஊருக்கு சென்று படிக்க கூடிய சூழ்நிலை ஏற்படும், அப்போது உங்களுடைய குணம் மாறாமல் இருக்க வேண்டும். 
 
மாணவ மாணவிகள் கண்டிப்பாக தலைவர்களை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். அம்பேத்கார், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களை பற்றி கண்டிப்பாக மாணவ மாணவிகள் தெரிந்துகொள்ள வேண்டும்.
அடுத்தது நீங்க தான் நாளைய வாக்காளர்கள், நீங்க தான் நல்ல நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க போறீங்க. நம்ம விரல வெச்சு நம்ம கண்ணையே குத்துறது சொல்லுவாங்கள அது தான் இப்போ நடந்துகிட்டு இருக்கு. காசு வாங்கிவிட்டு ஓட்டு போடுவது.
 
இனி மாணவர்கள் ஆகிய நீங்கள் தான் உங்களுடைய தாய், தந்தையிடம் சென்று பணம் வாங்காமல் ஓட்டு போடுங்க. இறுதியாக ஒரே ஒரு கோரிக்கை, இந்த தேர்வில் வெற்றிபெறாத மாணவ, மாணவிகளையும் நீங்கள் ஊக்கவிக்க வேண்டும். அவர்களும் அடுத்தடுத்து வெற்றிபெற வேண்டும் என பேசி தனது பேச்சு நிறைவு செய்தார் விஜய். பின்னர் மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கினார். பின்னர் மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கிய விஜய் முதலாவதாக 600க்கு 600 மதிப்பெண்களை பெற்ற மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் பரிசாக வழங்கினார் விஜய். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை யுக்ரேன் மீட்க அமெரிக்கா உதவுமா? டிரம்பின் முன்னாள் ஆலோசகர் தகவல்

ரூ.500 நோட்டாக மாறிய முத்திரைத்தாள்: யூடியூப் பார்த்து கள்ளநோட்டு அச்சடித்த கும்பல்..

3.60 கோடி லிட்டர் தண்ணீர் திருடிய தனியார் கல்லூரி: ரூ.2 கோடி அபராதம்!

234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெல்லும்.. திமுக கூட்டணி 2026 வரை நீடிக்காது: பிரேமலதா..!

விவசாயக் கடன் தள்ளுபடி.. பென்சன் வரம்பு உயர்வு.. 25 லட்சம் வேலைவாய்ப்பு! - மகாராஷ்டிரா பாஜக வாக்குறுதிகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments