Webdunia - Bharat's app for daily news and videos

Install App

15 நாட்களில் 100 கோடி மதிப்புள்ள பணம், தங்கம் பறிமுதல்! – தேர்தல் ஆணையம் அதிரடி!

Webdunia
ஞாயிறு, 14 மார்ச் 2021 (09:00 IST)
தமிழகத்தில் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் இதுவரை தேர்தல் ஆணையத்தால் ரூ.100 கோடி மதிப்புள்ள பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல் தேதி கடந்த பிப்ரவரி 26ம் தேதி மாலை அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. தமிழகம் முழுவதும் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் கட்சி சார்பில் பரிசு பொருட்கள் அளித்தல், பணப்பட்டுவாடா, மதுபானம் வழங்குதல் ஆகிய செயல்கள் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர், வருமான வரித்துறையினர் உள்ளிட்டோர் வாகன சோதனை உள்ளிட்ட சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு 15 நாட்களாகிவிட்ட நிலையில் இதுவரை ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.100 கோடி மதிப்பிலான தங்கம், பண ரொக்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் இதுதவிர ரூ.51 லட்சம் மதிப்பிலான 22,960 லிட்டர் மதுபானங்களும் பிடிபட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments