பணப்பட்டுவாடாவை கண்காணிக்க தலா ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அதிகாரிகள் நியமிக்க இருப்பதாக தகவல்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பிரச்சாரத்திற்கு மத்தியில் கூட்டணி கட்சிகளையும் அவற்றிற்கான தொகுதிகளை ஒதுக்கும் பணிகளையும் வேக வேகமாக நடத்தி முடித்தது.
இந்நிலையில், சட்டமன்ற தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் மொத்தமாக 272 தொகுதிகளில் அதிக அளவில் பணப்பட்டுவாடா நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும், அவற்றுள் தமிழகத்தில் மட்டும் 118 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனால், ஒவ்வொரு தொகுதிக்கும் பணப்பட்டுவாடாவை கண்காணிக்க தலா ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அதிகாரிகள் நியமிக்க இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.