இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அணியை சேர்ந்தவர்களுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் 40க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் கலந்துக் கொள்ளவில்லை என தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து இரட்டை சின்னத்தை மீட்பது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் சென்று பிரமாணப் பத்திரங்களை வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டது.
அதன்படி எடப்பாடி பழனிச்சாமி அணியினர் நேற்று டெல்லி சென்றனர். சி.வி.சண்முகம் உள்ளிட்ட மூன்று அமைச்சர்கள் இன்று காலை தேர்தல் அதிகாரியை சந்திக்க அனுமதி கோரியிருந்தனர். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் தினகரன் அணி ஆதரவாளர்கள் தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்தனர்.
அவரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில், அதில், கட்சியின் சின்னம், பொதுச்செயலாளர் பதவி போன்ற விவரங்களில் தங்களை கேட்காமல் முடிவு எடுக்க கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு அமைச்சர்களுக்கு அனுமதி அளிக்க மறுத்த தேர்தல் ஆணையம் தினகரன் ஆதரவாளர்களுக்கு அனுமதி அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.