Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை கைவிட வேண்டும்: டாஸ்மாக் ஊழியர் சம்மேளனம் கோரிக்கை..!

காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை கைவிட வேண்டும்: டாஸ்மாக் ஊழியர் சம்மேளனம் கோரிக்கை..!

Siva

, செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 (15:36 IST)
டாஸ்மாக் கடையில் வாங்கும் மது பாட்டில்களில் காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் சமீபத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என சிஐடியு டாஸ்மாக் மாநில ஊழியர் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.

சிவகங்கையில் இன்று டாஸ்மாக் மாநில ஊழியர் சம்மேளன மாநில குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்ட நிலையில் காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அரசு அமல்படுத்தி உள்ளது என்றும் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் இந்த திட்டத்தால் தொழிலாளர்களுக்கு வரும் நடைமுறை பிரச்சனைகளை கருத்தில் கொள்ளாமல் அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.

ஊழியர்களின் பணி சுமையை கருத்தில் இருந்து தாலி பாட்டில்களை திரும்ப பெரும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கம் மட்டும் இல்லாமல் டாஸ்மாக் நிறுவனத்தில் உள்ள இதர தொழிற்சங்கங்களையும் இணைத்து போராட்டம் நடத்துவோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்றும் டாஸ்மாக் மாநில ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் திருச்செல்வன் அவர்கள் தெரிவித்தார்.

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹரியாணா சட்டப் பேரவைத் தேர்தலில் வினேஷ் போகத் போட்டியா? பரபரப்பு தகவல்..!