அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவரை விசாரணை செய்ய முடியவில்லை என அமலாக்கத்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதம் செய்யப்பட்டு வருகிறது.
செந்தில் பாலாஜியை மருத்துவர்கள் அனுமதி பெற்று தான் விசாரிக்க முடியும் என்ற நிபந்தனை காரணமாக அதிகாரிகள் மருத்துவமனை மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்த முடியவில்லை என்று வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
மேலும் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்றதற்கு ஆதாரம் உள்ளது என்றும் ஆதாரத்தின் அடிப்படையில் தான் செந்தில் பாலாஜியை கைது செய்து உள்ளோம் என்றும் அமலாக்கத்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க உச்சநீதிமன்றமே அனுமதி வழங்கி உள்ளது என்றும் எனவே மேகலா மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வழக்கறிஞர் தனது வாதத்தையும் தெரிவித்தார்