Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி கொரியர் அலுவலகத்தில் சோதனை.. அமலாக்கத்துறை அதிரடி..!

ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி கொரியர் அலுவலகத்தில் சோதனை.. அமலாக்கத்துறை  அதிரடி..!

Mahendran

, வியாழன், 14 மார்ச் 2024 (11:12 IST)
சென்னை பல்லாவரத்தில் உள்ள எஸ்.டி. கொரியர் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி மற்றும் அவரது குடும்பத்தினர் நடத்தி வரும் எஸ்.டி. கொரியர் நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டு வருவதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இன்று அதிகாலை முதல் சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
தியாகராய நகர், திருவான்மியூர், முகப்பேர், கொளத்தூர் பகுதிகளிலும் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனை குறித்து விரைவில் அதிகாரிகள் விளக்கம் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள்: அண்ணாசலையில் ஓர் ஆண்டுக்கு போக்குவரத்து மாற்றம்