Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எம்.எஸ்சி படிப்புக்கான நுழைவுத்தேர்வு: அண்ணா பல்கலை முக்கிய அறிவிப்பு..!

எம்.எஸ்சி படிப்புக்கான நுழைவுத்தேர்வு: அண்ணா பல்கலை முக்கிய அறிவிப்பு..!
, புதன், 10 மே 2023 (11:35 IST)
எம்எஸ்சி படிப்புகளுக்கான நுழைத்தேர்வு குறித்து அண்ணா பல்கலைக்கழகம் சற்று முன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 
 
சென்னை அண்ணா பல்கலைக்கழக கழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரி மற்றும் சென்னை தொழில்நுட்ப கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் எம்எஸ்சி படிப்பில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு தேர்ச்சி பெற வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே. 
 
இந்த நிலையில் வரும் கல்வி ஆண்டுக்கான நுழைவு தேர்வு ஜூன் நான்காம் தேதி நடைபெற உள்ளதாகவும் இதற்காக இணையதளம் மூலம் விண்ணப்ப பதிவு தற்போது நடைபெற்று வருவதாகவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 
 
எம்எஸ்சி படிப்பில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் www.annauniv.edu என்ற இணையதளத்தில் மே 26 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 044-22358314/358276 என்ற தொலைபேசி எண் அல்லது dircfa@annauniv.edu மின்னஞ்சலை தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை மாணவர்கள் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒன்னுக்கு இன்னொன்னு சளைச்சதில்ல..! POCO F4 vs POCO F5! – எது பெஸ்ட்?