கர்நாடகத்தில் மேகதாது அணை கட்டினால் தமிழகத்தில் உள்ள 20 மாவட்டங்கள் பாலைவனமாகும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எச்சரித்துள்ளார்.
சமீபத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா கர்நாடக மாநிலத்தில் மேகதாது கனவை கட்டுவது உறுதி என்றும் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்தார். அவரது அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மேகதாது அணை கட்ட பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டு ஆணையம் மேகதாது குறித்து விவாதித்தது நீதிமன்ற அவமதிப்பாகும் என்றும் கர்நாடகாவின் செயலை மத்திய மாநில அரசுகள் கைகட்டி வேடிக்கை பார்ப்பது கண்டனத்துக்குரியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேகதாது அணை கட்டினால் தமிழகத்தில் உள்ள 20 மாவட்டங்களில் குடிநீர் பிரச்சனை ஏற்படும் என்றும் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகும் என்றும் மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்றும் தவறினால் அறப்போராட்டம் நடத்தப்படும் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.