ஆதரவாளர்களுக்கு நன்மை செய்வதில் ஓ.பன்னீர் செல்வத்தை விட எடப்பாடி பழனிச்சாமி எவ்வளவோ பெட்டர் என கட்சிக்குள் ஒரு டாக் எழுந்துள்ளதாம்.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர், சசிகலா தமைமை பொறுப்பை ஏற்ற பின்னர் ஓபிஎஸ் முதல்வர பதவியை ராஜினாமா செய்துவிட்டு தர்ம யுத்தம் நடத்தினார். இதன் பின்னர் சசிகலா சிறைக்கு சென்றதும், தினகரனை ஓரம் கட்டிவிட்டு ஈபிஎஸ் - ஓபிஎஸ் கூட்டு சேர்ந்தனர்.
இந்நிலையில் இப்போது வரை கட்சிக்குள் ஈபிஎஸ் அணி ஓபிஎஸ் அணி என இரு பிரிவுகள் இருந்து வருகிறது. ஆனால், ஓபிஎஸ் ஆதரவாளர்களும் தற்போது ஈபிஎஸ் பக்கம் சாய்வதாக தெரிகிறது. ஆம், ஈபிஎஸ் தனது ஆதரவாளர்களுக்கு முடிந்த அளவு முக்கியத்துவம் கொடுத்து நடத்துகிறாராம்.
உதாரணமாக ஈபிஎஸ் தனது ஆதரவாளருக்கு ராஜ்ய சபா சீட் வாங்கி கொடுத்துள்ளார். ஆனால், ஓபிஎஸ் மூத்தவர்களை விட்டுவிட்டு தேர்தலில் வெற்றி பெற்ற ஒரே காரணத்திற்காக தனது மகனுக்கு சீட் வாங்கி கொடுத்துவிட்டார்.
எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களை கைவிடாமல், அவர்களுக்கு உரிய சலுகைகளை அளித்து வருகிறாராம். ஆனால், இந்த விஷயத்தில் ஓபிஎஸ் பயங்கரமாக கோட்டைவிடுவதால் கட்சிக்குள் இருக்கும் ஓபிஎஸ் ஆதரவாளர்கல் ஈபிஎஸ் பக்கம் மாறத்துவங்கியுள்ளனராம்.